அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா ? முதல்வர் ஸ்டாலின்

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, சொல்லாததையும் செய்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா ? முதல்வர் ஸ்டாலின்
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நிதிநிலை அறிக்கை உரை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த 2016 தேர்தலில் கூறப்பட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பியதுடன், மோனோ ரயில் திட்டம், செல்போன், வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். பின்னர், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, சொல்லாததையும் செய்து வருகிறது.

14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பு தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பயிர்க்கடன், நகைக்கடன் மீது நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதுகுறித்த அறிக்கை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Updated On: 2021-08-16T17:16:45+05:30

Related News