Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சாலையில் கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
அம்பத்துார் பகுதியில் சாலையில் கிடந்த 16 ஆயிரம் பணத்தை கட்டுமான தொழிலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
HIGHLIGHTS

சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ.இடம் ஒப்படைப்பு.
நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன், (53) கட்டுமான தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில், முகப்பேர்,சென்னை குடிநீர்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற போது 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் சாலையில் கேட்பாரற்று கிடந்தது. அதை கண்டெடுத்தவர் சில நிமிடம் யாராவது தேடி வருகின்றனரா என காத்திருந்தார். யாரும் வராத நிலையில், அந்த பணத்தை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எஸ்.ஐ., ஜெயமணியிடம் ஒப்படைத்தார்.