அம்பத்தூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழா: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
அம்பத்தூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழாவில் எம்எல்ஏவும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.
HIGHLIGHTS

அம்பத்தூர் மண்டல குழு தலைவர் அலுவலகத்தை இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
அம்பத்தூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழாவில் எம்எல்ஏ வும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.
அம்பத்தூர் மண்டல குழு தலைவர் அலுவலக திறப்பு விழா சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். வடக்குப் பகுதி செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் சாமுவேல், கிழக்கு பகுதி செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அம்பத்தூர் மண்டல குழு தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினர். இதில் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.