/* */

தமிழக சட்டசபையில் முதல்வர் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு

admk MLAs boycott ,tamil nadu assembly cm speech தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கான பதிலுரையை இன்று முதல்வர் ஸ்டாலின் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகஎம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

தமிழக சட்டசபையில்  முதல்வர் உரையை புறக்கணித்து  அதிமுகவினர் வெளிநடப்பு
X

தமிழக சட்டசபை நடக்கும் தலைமைச் செயலக முகப்பு தோற்றம்  (கோப்பு படம்)

admk MLAs boycott ,tamil nadu assembly cm speech

தமிழகத்தில் தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடருக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. இன்று காலை சட்டசபை கூடியதும் காவல்துறை மானியக்கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையொட்டி சபாநாயகர் அப்பாவு பேசும்போது, சட்டசபை மானியக்கோரிக்கைகளின் விவாதங்கள் மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜனநாயகத்தினைப் போற்றும் அரசாக இருப்பதால் சபையின் கண்ணியத்தினைக் காக்கும் வகையில் சபையில் என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் முதல்வர் இதற்கு உறுதியளித்து உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சியினருக்கும் அதிக நேரம் பேச வாய்ப்பு அளித்து ஜனநாயக மாண்பு காக்கப்பட்டு வருகிறது.

admk MLAs boycott ,tamil nadu assembly cm speech


admk MLAs boycott ,tamil nadu assembly cm speech

பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, இந்த அரசானது இன்னும் சில நாட்களில் தன்னுடைய இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய உள்ளது. மக்களின் மனம் கவர்ந்த அரசாக ,ஒவ்வொருவரும் பயன் பெறும் அரசாக இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கோடி மகளிர் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பலன் தரும் அரசாக இது இருப்பதால்தான் வருவாய் பற்றாக்குறைய ரூ. 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்.

தவறுகளை சுட்டிக்காட்டும் நிலையில்இருந்து எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. தமிழ்நாட்டை இனி திமுகதான் ஆள வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர். தமிழகத்தில் சாதி சண்டைகள்,மதக்கலவரங்கள் இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை, அனைத்து துறைகளி்லும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கைப் பேணி பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கியிருக்கிறது. எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறையினர் தொடர்ந்து சட்டம் ஒழுங்கின் மாண்பைப் பேணிப் பாதுகாத்து அதன்படி நடந்து வருகின்றனர். தாழ்ந்த தமிழகம் தலை நிமிரும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். அவர்களுடைய நம்பிக்கையைப் பாதுகாக்கும் விதமாக நல்லாட்சி நடந்துகொண்டிருக்கிறது.

லாட்டரி, நிதிநிறுவன மோசடி, கஞ்சா, வன்முறைக்கு வித்திடுவோர் உள்ளிட்டோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல அரசு என்பதற்கு உதாரணமாக தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீது பரப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வதந்தி காணொலிகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கூட்டம் நடத்தி நான் உத்தரவிட்டேன். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட மாநில தொழிலாளர்கள் உள்ள இடங்களுக்கு சென்று புலம்பெயர்ந்த வடநாட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் என அதிகாரிகளும், கலெக்டர்களும்உ றுதியளித்தனர். பீகார் மாநில முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக அவர்களுடைய பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளித்தேன் .

அதேபோல் பீகார் மாநில அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்து விட்டு சென்றனர். இந்த பிரச்னை தொடர்பாக 88 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 128 பேர் கைது செய்யப்பட்டனர் என பேசினார் முதல்வர்.

காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் மீது பதில் அளிக்கும் விதமாக முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 April 2023 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  4. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  8. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  9. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  10. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...