சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மருத்துவமனையில் அனுமதி
X

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இன்று மதியம் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உடனடியாக போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனரின் சொந்த வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரின் உடல்நிலை குறித்து சிகிச்சைக்குப் பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது.

உடல்நலம் குறித்து விசாரிக்க, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

Updated On: 2021-10-15T17:05:11+05:30

Related News