/* */

actor vijay starts political party soon இப்போ வருவாரா?....எப்ப வருவாரோ?...... நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவக்க திட்டம் :ஏற்பாடுகள் ஜரூர்.....

actor vijay starts political party soon நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாள் எப்போது ? என அனைவருமே எதிர்நோக்கியுள்ளனர்.

HIGHLIGHTS

actor vijay starts political party soon  இப்போ வருவாரா?....எப்ப வருவாரோ?......  நடிகர் விஜய்  விரைவில் அரசியல் கட்சி   துவக்க திட்டம் :ஏற்பாடுகள் ஜரூர்.....
X

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் ஸ்லோகனுடன் (கோப்பு படம்)


actor vijay starts political party soon

தமிழகத்தில் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.தமிழகத்தினைப் பொறுத்தவரை திராவிட கட்சிகளாக திமுக, அதிமுக இவையிரண்டுமே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதுவும் கடந்த 2011 மற்றும் 2016 ம் நடந்த சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது . 2016 ம் ஆண்டு தேர்தல் நடந்து முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச் சை பெற்ற நிலையில் இறந்தார்.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

பின் ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்று தர்மயுத்தம் நடத்தி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் இபிஎஸ் பதவிக்காலம் முடியும் வரை முதல்வராக இருந்தார். பின் 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்த நிலையில் தற்போது 3 வது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது. அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் இபிஎஸ் ஆவார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுக தலைவரானார் ஸ்டாலின். பின்னர் கட்சியில் பல அதிரடி மாற்றங்களைச் செய்தார்.இது பல நிர்வாகிகளுக்கு வருத்தத்தைத் தந்தது.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ரஜினி கட்சி துவக்கி போட்டியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் சினிமாவில் பாடிய பாட்டு போல கட்சியும் இல்ல, கொடியும்இல்ல, போய் அவரவர்களின் வேலைகளைப் பாருங்கள் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை செய்து அனுப்பி வைத்தார். இப்ப வருவாரா? எப்ப வருவார் ? என அவரை எதிர்பார்த்த தமிழகத்திற்கு இப்போது சினிமா உலகத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்க துடிப்பவராக ரசிகர்களால் தளபதி என போற்றப்படும் நடிகர் விஜய் தயாராக இருப்பதாகவும் இதற்காக திமுக அதிமுக செயல்பாடுகளை உற்று நோக்கியும் பல அரசியல் புத்தகங்களை அவர் வாசித்து வருவதாகவும் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

கடந்த தேர்தலின்போதே நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அரசியலுக்கு வர உள்ளார் என்பதற்கு அச்சாரமாக பல முன்னேற்பாடுகளைச் செய்தார் ஆனால் அதற்கு விஜய் மறுத்துவிட்டார். ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களை சென்னையில் சந்தித்துள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பெயரை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டு அதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை விஜய் ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

தனது ரசிகர்களுக்கு அரசியல் முன்னேற்பாடுகளில் களம் இறங்க பச்சைக் கொடி காட்டியுள்ளதும் இவர் விரைவில் அரசியலில் களம் இறங்க உள்ளதற்கு அச்சாரமாக உள்ளது. அரசியல் கட்சி என்றால் என்ன? அதன் விதிமுறைகள் ஷரத்துகள் என்னென்ன? என்பதையெல்லாம் அலசி ஆராயும் வகையில் புத்தகம் புத்தகமாக தேடிப் படிச்சிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் தமிழகத்தில் 50 ஆண்டுகளில் இருபெரும் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டே தொடர்ந்து வருகிறது. மாற்றி மாற்றி வசைபாடுவதுதான் தொடர்கிறதே ஒழிய மக்கள் பிரச்னைகளை இருவருமே தீர்க்கவில்லை என்றே பேச்சு அடிபடுகிறது. இது நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் துவக்கினால் இவராவது செய்வாரா? என்ற நப்பாசையில் பலர் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

விரைவில் அரசியல் கட்சி

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கினால் பல இளைஞர்கள் அதில் சேர வாய்ப்பிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. காரணம் அவர் நடித்த படங்கள் அப்படி? பல படங்களில் சமூக பிரச்னைகளை முன்வைத்து அவர் நடித்துள்ளதால் அதைப்போலவே அவர் அரசியலிலும் மக்களுக்கான சேவையை திறம்பட ஆற்றுவார் என்ற நம்பிக்கையில் பலர் இவர் கட்சியில் இணையாவிட்டாலும் இவரது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக தற்போதுள்ள மக்கள் இயக்கத்திற்கு உள்ளது. பெயரையே பாருங்க மக்கள் இயக்கம்... இந்த உலகில் மக்கள் சக்திக்கு இணை ஏதும் இல்லை. மக்கள் நினைத்தால் சரித்திரமே மாறும்... இது பல தேர்தல்களில் நிரூபணமாகியுள்ளது.

இதற்கு அச்சாரமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டும் நற்சான்றும் வழங்கப்படுவதாக மக்கள் இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. எனவே மக்கள் இயக்கத்தின் முதல் குறிக்கோளே இளைஞர்களை ஒன்று சேர்ப்பது.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

தமிழக அரசியல் சூழ்நிலை

தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளில்திமுக மட்டுமே தற்போது ஆளும் கட்சியாக உள்ளது. இருந்தாலும் இதிலும் பல உட்கட்சிப்பூசல் இருப்பதால் அதாவது பல சீனியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருவதால் கட்சியிலுள்ள சீனியர்கள் வருத்தமடைந்துள்ளனர். காலம் காலமாக கட்சிப்பணி ஆற்றியவர்களுக்கு சீட் தராமல் பணத்தினை பிரதானமாக வைத்து சீட் தருவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி கேட்கின்றனர் சீனியர் நிர்வாகிகள்.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

இந்த கோஷ்டிப்பூசல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து இருந்தாலும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் ஒற்றுமையின்றி கோஷ்டிப்பூசல் காரணமாக தனித் தனிப்பிரிவாக செயல்படுவதால் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க யோசிக்கும் நிலைதான்?

அதிமுகவைப் பொறுத்தவரை இபிஎஸ்தான் உண்மையான அதிமுக என்று சொன்னாலும் இதிலும் பல பிரச்னைகள் உள்ளது. முதலில் இருந்த கட்சிக் கட்டுக்கோப்பு இப்போது இல்லை என்ற பேச்சே பரவலாக பேசப்படுகிறது. ஓபிஎஸ் தனிப்பிரிவாக செயல்பட்டால் ஓட்டுகள் சிதறும் நிலைதான் உருவாகும்.

இவ்விரண்டு கட்சிகளில் நிலவும் சூழ்நிலைகளைச் சாதகமாக்கி தமிழகத்தில் நிலையாக வலுவாக காலுான்ற திட்டமிடுகிறது பாஜ. இதன் எதிரொலியாகவே கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 4 பாஜ எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளனர். இது பாஜவின் தமிழக வளர்ச்சி என்று கூட சொல்லலாம். தமிழக பாஜ தலைவருக்கு எதிராக எத்தனை கோஷ்டிகள் புறப்பட்டாலும் டில்லி தலைமையானது பாஜ மாநில தலைவரை மாற்றாது என்றே எண்ணத்தோன்றுகிறது. காரணம் தற்போதைய பாஜவின் தமிழக வளர்ச்சிதான்.

actor vijay starts political party soon

actor vijay starts political party soon

எப்போது ? எங்கே?

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தாலும் அவருக்கு ஓரளவு வாக்குகள் விழ வாய்ப்புள்ளதாகவே அரசியல்நோக்கர்கள் கருதுவதால் நேரம் பார்த்து களத்தில் இறங்க நடிகர் விஜய் அதற்கான முன்னேற்பாடு பணிகளைத் துவக்கி விட்டார் என்றே பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. எங்கே எந்த மாவட்டத்தில் புதிய கட்சியினைத் துவக்க போகிறார் அதற்கான தேதி என்ன? என்பதை விரைவில் மக்கள் இயக்கம் அறிவிக்கும் என அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். மக்களுக்கு சேவையாற்ற பல புதியவர்கள் புறப்பட்டு வரவேண்டும்... மக்கள் பணி செவ்வனே நடக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும்வாக்காளர்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது.

Updated On: 15 Jun 2023 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்