/* */

8 ministers of tamilnadu to be changed shortly தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? 8 அமைச்சர்கள் பதவி பறிக்க முதல்வர் முடிவு

8 ministers of tamilnadu to be changed shortly தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளதாக தெரிகிறது. மே 2 வது வாரத்தில் அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தினை முதல்வர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

8 ministers  of tamilnadu  to be changed shortly  தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?  8 அமைச்சர்கள் பதவி பறிக்க  முதல்வர் முடிவு
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்  (கோப்பு படம்)

8 ministers of tamilnadu to be changed shortly

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011 ம் ஆண்டு மற்றும் 2016 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதில் 2011 ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்த வரை அமைச்சர்களின் மீது வரும் புகார்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுப்பார். அதாவது மாதத்தில் அமாவாசை வந்தாலே அப்போது அமைச்சராக இருந்தவர்களுக்கு வயிறு கலக்கும் என்ற நிலை இருந்தது. திடீர் திடீரென பதவி மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

2016 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் முதல்வராக பதவி வகித்த போதே திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவருக்கு பின் பதவி வகித்த முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ், அவருக்கு பிறகு பதவி வகித்த இபிஎஸ் ஆகியோர் அமைச்சரவையில் எந்த மாற்றமுமே கடைசி வரை செய்யவில்லை. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அதிரடி ரெய்டு நடந்தும் ஏனோ அமைச்சர் பதவியைப் பறிக்கவில்லை. இது அதிமுகவின் நிலை.

2021 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக கைப்பற்றியது. இதனால் 2021 மே 7ந்தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சக அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தற்போது இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் நடுவில் ஒரு சில அமைச்சர்களுக்கு துறை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டது. இருந்தாலும் அமைச்சர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தார் முதல்வர். சரியாக செயல்படாவிட்டால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுத்தார்.



தமிழக அரசின் தலைமைச் செயலகம் (கோப்பு படம்)

8 ministers of tamilnadu to be changed shortly

2022ம் ஆண்டில் முதன் முறையாக தமிழக அமைச்சரவையில் சிறு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக முன்பு பதவியேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி மாற்றம் செய்யப்பட்டார்.முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இரண்டாவது மாற்றம்

இதன் பின்னர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்ஏ வான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் விளையாட்டுத்துறைமற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டு பதவியேற்றார். அப்போது 10 அமைச்சர்களின் இலாகாக்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. ஒரு சில அமைச்சர்களுக்கு கூடுதலாக துறைகள் ஒதுக்கப்பட்டன.

உளவுத்துறை தகவல்

2023 ம் ஆண்டு மே 7 ந்தேதியோடு திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. துவக்க காலத்தில் இருந்தே அமைச்சர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.இடையில் பல தகவல்கள், புகார்களைப் பெற்றாலும் எச்சரிக்கையோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் தற்போதைய உளவுத்துறை தகவல் படி ஒரு சில சீனியர் அமைச்சர்கள் செயல்படாத அமைச்சர்களாக இருப்பதாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுத்துவிட்டு வேறு நபர்களுக்கு பதவி அளிக்க அதாவது மே 2 வது வாரத்தில் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

8 ministers of tamilnadu to be changed shortly

திமுக தரப்பில் தெரிவிக்கும்போது,

தற்போது அமைச்சராக உள்ள ஒரு சிலர் போதிய நிர்வாகத்திறன் இல்லாமலும், அவர்களை மேம்படுத்திக்கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகிஇருப்பதாகவும் தகவல்கள் சென்றுள்ளது.

அவர்கள் பங்கேற்றுள்ள துறை அதிகாரிகளிடம் கூட சரியான செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு சில சீனியர் அமைச்சர்களும் பட்டியலில் இருப்பதாக தெரிகிறது. இந்த விஷயத்தினைக் கேள்விப்பட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் கட்சியின் நலன் மற்றும் எதிர்காலம், ஆட்சியின் நலனைக் கருதி எட்டு அமைச்சர்களை மாற்றிவிடலாம் அவர்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு பதவி தரப்படலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் தற்போது வைரலாகி உள்ள நிதியமைச்சரின் ஆடியோ விவகாரத்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்படுவாரா? .ஏற்கனவே பல முறை விமர்சனத்துக்கு உள்ளான பல சீனியர் அமைச்சர்கள் அனைவரும் இந்த விஷயத்தினைக் கேள்விப்பட்டு கதி கலங்கியுள்ளனர். யார் பதவி பறிக்கப்படும்? என்று கலக்கத்தில் உள்ளனர் அமைச்சர்கள் அனைவருமே.

அதிகாரதுஷ்பிரயோகம்

கடந்த 2 ஆண்டுகளாக பதவியில் திமுக இருந்து வந்தாலும் நிர்வாகிகளிடையே பல மாவட்டங்களில் இன்று வரை கோஷ்டிபூசல் தொடர்ந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததால் மக்களுக்கான பல பணிகள் பாதிப்படைகிறது. பல உள்ளூர் கவுன்சிலர்கள் பெயரிலும் பல புகார்கள் அறிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று கொண்டிருக்கின்றன.கவுன்சிலர்கள் அவர்களுடைய வார்டு பகுதியில் புதிய வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவோருக்கு வைக்கும் செக் பற்றியும் தினந்தோறும் கட்சித்தலைமைக்கு புகார்கள் குவிகிறது. எனவே மே மாதம் என்ன நடக்கும்? என இப்போது நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். எதுவேண்டுமானாலும் நடக்கலாம். முன்பு போல் ஆக்கிரமிப்பு, கட்டபஞ்சாயத்து, அடிதடி, கட்டாய வசூல், என தலையிடும் நிர்வாகிகள் மீதும் பல புகார்கள் சென்றுள்ளதால் அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.பாஜ தலைவர் அண்ணாமலை அண்மையில் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.அதன் எதிரொலியாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்று அரசியல் நோக்கர்கள் பேசிக்கொள்கின்றனர்.

8 ministers of tamilnadu to be changed shortly

முதல்வர் வெளிநாடு பயணம்

2024ம் ஆண்டு துவக்கமான ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், ஜப்பான் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்டவெளிநாடுகளுக்கு செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் 2ந்தேதி நடக்க உள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் இப்பயணம் குறித்து ஸ்டாலின் முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

மாமல்லபுரத்தில் 2 நாட்கள் குடும்பத்துடன் தங்கி அலுவல் பணிகளைக் கவனிக்கும்போது முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.பின்னர் மே 20 ம் தேதிக்கு பின் வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக லண்டன் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் கலக்கம்

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியே இல்லாத நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து பதவி கிடைத்தும் அதனை சரிவர பயன்படுத்த முடியவில்லையே என்ற கலக்கத்தில் பல அமைச்சர்கள் கதி கலங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இனி என்னதான் அடக்கி வாசித்தாலும் ஏற்கனவே நம்மீது வந்த புகார்களை மறைக்க முடியாதே என பல அமைச்சர்கள் என்ன ஆகுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர் என்பதே உண்மை.பாஜ தலைவர் அண்ணாமலை அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் இன்னும் என்ன என்ன நடக்கப்போகிறதோ என்ற கலக்கத்திலும் பல அமைச்சர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Updated On: 24 April 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...