/* */

பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பொதுத்துறை ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

HIGHLIGHTS

பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
X

முதலமைச்சர் ஸ்டாலின்

இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாது :

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி மிகவும் குறைந்து வந்தது. மேலும், இரண்டாவது அலையால் பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது.

குறிப்பாக, அதிக எண்ணிக்கையில் தொழிலாளா்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான போக்குவரத்துக் கழகங்கள், மின் உற்பத்திக் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத் துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தொடா்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி, போனஸ் பெறத் தகுதியான ஊதிய உச்சவரம்பு ரூ.21

ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர ஊதிய உச்ச வரம்பும் ரூ.7 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

லாபம் மற்றும் நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளா்கள், பணியாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும். இதனால், போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளா்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவா்.

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளா்கள் இதன்மூலம் பயன்பெறுவா். ரூ.216.38 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Updated On: 24 Oct 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...