காதலி, மாமியார் நிர்வாண படங்களை வெளியிட்ட சென்னை டாக்டர் கொலை

காதலி மற்றும் மாமியாரின் நிர்வாண படங்களை வெளியிட்ட சென்னை டாக்டர் பெங்களூருவில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காதலி, மாமியார் நிர்வாண படங்களை வெளியிட்ட சென்னை டாக்டர் கொலை
X

காதலியுடன் டாக்டர் விகாஸ்.

சென்னையை சேர்ந்தவர் டாக்டர் விகாஷ். இவர் உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டருக்கு படித்திருந்தார். சென்னையில் டாக்டராக அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். டாக்டர் விகாஷ் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகளுக்காக அடிக்கடி வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வது உண்டு. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் உள்ள காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் இறந்து விட்டார். இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விகாசை, அவரது காதலி மற்றும் நண்பர்கள் தான் கொலை செய்திருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


டாக்டர் விகாஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி பெங்களூரு காவல் துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

விசாசுக்கு டேட்டிங் ஆப் மூலம் பிரதீபா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு பேசி புரிந்துகொண்டு பெங்களூரின் பேகுர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 'லிவ் இன்' முறையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. தொடக்கத்தில் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் கனவு ஒருவழியாக நிறைவேறியதையடுத்து இருவரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.

பிரதீபா தனது காதலனுடன் நெருக்கமாக இருப்பதை புகைப்படமாக காதலன் விகாஸ் எடுத்து வைத்துள்ளது காதலி பிரதீபாவுக்கு தெரியவந்துள்ளது. மேலும் காதலியை நிர்வாணமாக புகைப்படமும் எடுத்து வைத்திருக்கிறார் விகாஸ். இது பிரதீபாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இத்துடன் நிற்கவில்லை. திருமணம் தொடர்பாக பேசுவதற்காக வீட்டிற்கு வந்திருந்த பிரதீபாவின் அம்மாவையும் விகாஸ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் காதலி பிரதீபா மனமுடைந்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துள்ளார். இவையெல்லாமும் பிரதீபாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில், அவர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த படங்கள் போலியான கணக்கு மூலம் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அது.

இதைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த பிரதீபா தனது காதலன் விகாசுடன் சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியே பிரிந்து சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையும் தவிர்த்துள்ளனர். பின்னர் கடந்த 10ம் தேதி இந்த சம்பவம் குறித்து பேச வேண்டும் என்று, பிரதீபா விகாஸை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் விகாஸ் கால் இடறி மாடியிலிருந்து தவறி விழுந்ததகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து நேற்றுவரை சிகிச்சை பெற்றிருந்த விகாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது தான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கடந்த 10ம் தேதி தனது வீட்டுக்கு விகாஸை அழைத்த பிரதீபா, தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸை தாக்கியுள்ளார். இதில் விகாஸ் படுகாயமடையவே அவரை பிரதீபா மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது விகாஸ் உயிரிழந்த நிலையில், தற்போது பிரதீபா மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலை நடந்தது கர்நாடக மாநிலம் பெங்களூரு என்றாலும் டாக்டர் விகாசின் சொந்த ஊர் சென்னை என்பதால் கர்நாடக மாநில போலீசார் சென்னையில் முகாமிட்டு விகாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியின் நிர்வாண படத்தை வெளியிட்டதோடு அவரது தாயார் படத்தையும் நிர்வாண நிலையில் விகாஸ் வெளியிட்டு இருப்பதால் அவருடன் விகாசுக்கு தவறான தொடர்பு எதுவும் இருந்தததா? அவரது அந்தரங்க படத்தை விகாஸ் எவ்வாறு எடுத்தார் என்பது பற்றியும் பெங்களூரு போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

இந்த கொலை நடத்தும் உண்மை இணையம், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்னதான் விஞ்ஞான வளர்ச்சிக்கும் தகவல் தொழில்நுட்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இது போன்ற சம்பவங்களால் இந்த உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்ற ஒரு பெரிய கேள்வியை தான் எழுப்பி உள்ளது. முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுகிறது, ஆண்ட்ராய்டு போன் திரையில் முகத்தை பார்க்கும் அவர்கள் அதன் பின்னணியில் உள்ள உண்மையை அறியாமல் தோல் கவர்ச்சியால் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முற்படுகிறார்கள் .பின்னர் அதுவே நெருங்கிய நட்பாக மாறுகிறது கண்டதும் காதல் ஒன்றாக வாழ்ந்ததும் திடீரென வெறுத்து விடுகிறது. இதன் காரணமாக உண்மைகள் தெரிய வர ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொள்கிறார்கள். பின்னர் அதுவே கொலையில் போய் முடிகிறது. இது போன்ற குற்றங்கள் வெளிநாடுகளில் தான் அதிகமாக இருந்த நிலை மாறி இப்போது நமது நாட்டிலும் பரவி வருவதற்கு கலாச்சார சீரழிவு தான் காரணம் என்கிறார்கள் சமூக வல்லுனர்கள்.

Updated On: 2022-09-23T10:02:12+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...