/* */

சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில்; 4 நாட்களுக்கு மட்டும் காட்பாடி வரை இயக்கம்

Katpadi To Mettupalayam Train-சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 4 நாட்களுக்கு காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில்; 4 நாட்களுக்கு மட்டும் காட்பாடி வரை  இயக்கம்
X

சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில்; காட்பாடி வரை மட்டுமே 4 நாட்களுக்கு இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Katpadi To Mettupalayam Train-சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை மாத மாதாந்திர பராமரிப்பு, தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால் சென்னை செல்லும் 8ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலின் படி தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) ஜூலை 11,18,25 மற்றும், ஆகஸ்டு 1 ம்தேதி (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய நான்கு நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்கு ரயில் செல்லாது. மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் மாலை 4:20 மணிக்கு காட்பாடியில் இருந்து ரயில் (எண்:12679) இயக்கம் துவங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் தொடர் வலியுறுத்தலால், திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர ரயில் (எண்:06044) இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகரித்ததால் ரயில் இயக்கம் ஆகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, அரக்கோணம் வழியாக செல்லும். இந்த ரயிலில், 3 ஏசி., 9 படுக்கை வசதி, 5 பொது, 2 சரக்கு பெட்டி இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக, ரப்திசாஹர், ஹிம்சாகர், பாட்னா உட்பட 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் வழியாக செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை தெற்கு மத்திய ரயில்வே அதிகரித்துள்ளது.

எர்ணாகுளம் - பரூனி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஓங்கோல் - விஜயவாடா இடையே, சிரலா ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நிற்கும்.ஸ்ரீவைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நெல்லூர் - ரேணிகுண்டா இடையே குண்டூரில் 2 நிமிடங்கள் நிற்கும். எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் விஜயவாடா - வாரங்கல் இடையே கம்மம், வாரங்கல் - பெலம்பல்லி இடையே ராமகுண்டம் மற்றும் மன்சிர்யல் ஆகிய ஸ்டேஷன்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.இவை தவிர மேலும் 11 ரயில்கள் கூடுதலாக நின்று செல்லும் ஸ்டேஷன்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 10:16 AM GMT

Related News