/* */

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால், நாகப்பட்டினம் கடலூர் துறைமுகங்களில் நான்காம் எண் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன

HIGHLIGHTS

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
X

சென்னை எண்ணூர் துறைமுகங்களில்  ஏற்பட்டுள்ள புயல் எச்சரிக்கை கூண்டு

மாண்டஸ் புயல் அபாயத்தை அடுத்து சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு சென்னை அருகே கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப் பள்ளி அதானி ஆகிய மூன்று துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது. புதன்கிழமை 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் அது விலக்கிக் கொள்ளப்பட்டு வியாழக்கிழமை இரவு 6-ம் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் புயல் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது. எந்த நேரமும் துறைமுகங்கள் அருகே கரையை கடக்க கூடும். இதனால் பலத்த காற்றுடன் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்பது இந்த எச்சரிக்கை கூண்டின் அறிவிக்கை ஆகும்.

புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நிமித்தமாக சரக்கு பெட்டகம், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்பு கழிவுகள், பொது சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கான கப்பல்கள் அவசரம் அவசரமாக நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துறைமுக நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரைக்கால், நாகப்பட்டினம் கடலூர் துறைமுகங்களில் நான்காம் எண் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், நேற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே நாளை (09.12.2022) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழக அரசு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் :

9-12-2022 இரவு 'மாண்டஸ்' புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பணியை தவிர புயல் கரையை கடக்கும் போது சாலைகளில் செல்லக்கூடாது.

பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும்போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் (Selfie) எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், ட்விட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும. இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

Updated On: 8 Dec 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்