மடையத்தூர் ஊராட்சியில் பட்டா தீர்வு தொடர்பான சிறப்பு முகாம்

மடையத்தூர் ஊராட்சியில் பட்டா தீர்வுக்கான சிறப்பு முகாமில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனு வழங்கினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மடையத்தூர் ஊராட்சியில் பட்டா தீர்வு தொடர்பான சிறப்பு முகாம்
X

மடையத்தூர் ஊராட்சியில்  நடைபெற்ற பட்டா சிறப்பு முகாம். 

செங்கல்பட்டு மாவட்டம், மடையத்தூர் ஊராட்சியின் கிராம சேவைமையத்தில், திருப்போரூர் வட்டாச்சியரகத்துக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின், பட்டா தொடர்பான பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் கிராம அளவிலான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், திருப்போரூர் வட்டாச்சியரக மண்டல துணைவட்டாச்சியர் சத்யா முன்னிலையில், மடையத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திராஜெயவேல், பொதுமக்களிடம் இருந்து, பட்டா சம்பந்தமான மனுக்களை பெற்று, முகாமினை துவங்கி வைத்தார்.

ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் கே.குமார் ,வார்டு உறுப்பினர்கள் வீரராகவன், கன்னியம்மாள் தேவராஜ், யசோதா தேவராஜ், முருகவேல், மகேஷ்வரி, ஊராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, மடையத்தூர் கிராமநிர்வாக அலுவலர் பூங்கொடி, நிலஅளவையாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.

இம்முகாமில், மடையத்தூர் ஊராட்சி பொதுமக்களிடம் இருந்து பட்டா சம்பந்தமான மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் அஇஅதிமுக கட்சியின் திருப்போரூர் தெற்கு ஒன்றிய வர்த்தக அணியின் செயலாளர் மடையத்தூர் ஜெயவேல் மற்றும் மடையத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சேட்டு ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இம்முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சந்திராஜெயவேல் செய்திருந்தார்.

Updated On: 25 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா