/* */

கட்டட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை. படைத்துள்ளார்

HIGHLIGHTS

கட்டட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை
X

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர் இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளா. தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார். கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர்.

அதன் முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டி இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18ம் தேதி முதல் 21ம் வரை நடந்த போட்டியில் ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.


மேலும் வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர்.

நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா.

Updated On: 25 Sep 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?