/* */

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ

சைக்கிள் ரோந்தின்போது போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த நான்கு பேரை விரட்டிச் சென்று, எஸ்.ஐ. கைது செய்தார்.

HIGHLIGHTS

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ
X

பிடிபட்டவர்கள் 

சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை, பழைய செக்போஸ்ட் அருகே, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தாம்பரம் போலீசார் ஆறு பேர், சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பலாக நின்று கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும், சிதறி ஓட முயன்றனர்.

எனினும், போலீசார் சுதாரித்துக் கொண்டு, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சக போலீசார் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தார்.
அவர்களை சோதனை செய்து பார்த்த போது, வயிற்றில் சுமார் 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை வைத்திருந்தனர். அதனை பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் சார்லஸ் விசாரித்த போது கைதானவர்கள் புதுபெருங்களத்தூரை சேர்ந்த தங்கதுரை(20), நெடுங்குன்றத்தை சேர்ந்த அலன்ராஜ்(26), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த விஜய்(எ) பிரதீப்(21), குரோம்பேட்டையை சேர்ந்த கருப்பு லோகேஷ்(எ) லோகேஷ்வரன்(25), என்பதும் இவர்கள் பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதும், ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதில் கருப்பு லோகேஷ், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அதே போல் மற்ற மூவர் மீதும் தாம்பரம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களிடம் இருந்து கத்தி, இரண்டு இருசக்கர வாகனம், மாத்திரை ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு தொடர்ந்து தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 4:00 AM GMT

Related News