/* */

குமரி முதல் சென்னை வரை தொடர் ஓட்டம்: 9 வயது சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி முதல் சென்னை வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் ஓடும் 9-வயது சிறுவன் வழிநெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு

HIGHLIGHTS

குமரி முதல் சென்னை வரை தொடர் ஓட்டம்: 9 வயது சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு
X

கன்னியாகுமரி முதல் சென்னை வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் ஓடும் 9-வயது சிறுவன் சர்வேஷ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இயங்கி வரும் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் 9-வயது சர்வேஷ் சர்வேஷ். கடந்த வருடம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரை முகநூலில் வரும் வீடியோக்களில் கண்டுள்ளார். இதுபோல் தானும் ஓட வேண்டும் என தனது தந்தை விசுவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தந்தை விசு சர்வேஷ் படிக்கும் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்துடன் பேசியுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகமும் அனுமதி அளித்த நிலையில், 9-வயது சிறுவன் சர்வேஷ் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, நிலையான வளர்ச்சி (SDG) உள்ளிட்ட 17-வகையான உலகளாவிய இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடர் ஓட்டத்தை துவங்கினார்.

கடந்த அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி அன்று சாதனைப் பயணத்தை துவங்கினார். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 700-கிலோ மீட்டர் பயணத்தை துவங்கினார். நாளொன்றுக்கு 60-முதல் 70-கிலோ மீட்டர் வரை தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் சர்வேஷ். இதுவரை 124- மாரத்தான் போட்டிகளிலும், 160- பதக்கங்களும், 200-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார். மேலும், வரும் வழிகளில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வாக விதைப்பந்துக்களை வீசியும் வருகிறார்.

இந்நிலையில் வண்டலூரில் தாம்பரம் சட்டமன்ற உறுபினர் எஸ்.ஆர்.ராஜா சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தும் தாம்பரம் வந்தடைந்த சர்வேஷ்க்கு தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் பூங்கொத்து மற்றும் சந்தன மாலை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தும் அங்கிருந்து புறப்பட்ட சர்வேஷ்க்கு வள்ளுவர் குருக்குலம் அருகே தமுமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோன்று குரோம்பேட்டையில் காவல்துறை ஆய்வாளர் முருகன் மற்றும் பல்லாவரம் திமுக பிரமுகர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர் ஓட்டம் ஓடி சாதனை படைக்கும் சர்சேஷ்வரனுக்கு ஸ்ரீசாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் உற்ச்சாகத்துடன் ஆங்காங்கே நின்றபடி சிறப்பாக வரவேற்று ஊக்கபடுத்தி வருகின்றனர். இதுபோன்று ஓவ்வொரு கல்லூரியின் ஓத்துழைப்பு இருக்குமேயானால் பல சர்வேஷ் போன்றவர்களை உருவாக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை.

Updated On: 16 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!