/* */

50 ஆண்டுகளில் வராத மாற்றங்கள் 5 மாதங்களில் வந்துவிடுமா சீமான் கேள்வி

50 ஆண்டுகளாக நாட்டை ஆண்டபோது கொண்டு வரமுடியாத மாற்றத்தை 5 மாதங்கள் நடந்து ராகுல் கொண்டு வந்துவிடுவாரா என சீமான் கேள்வி

HIGHLIGHTS

50 ஆண்டுகளில்  வராத மாற்றங்கள் 5 மாதங்களில் வந்துவிடுமா சீமான் கேள்வி
X

தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்

50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு, கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் நடந்து ராகுல்காந்தி கொண்டு வந்துவிடுவாரா என சீமான் கேள்வி எழுப்பினார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் சேலையூர் சுற்றுவட்டார தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறை கூட்டமைப்பு சார்பில் இமானுவேல் சேகரனாரின் 65வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திராவிட மாடல் என்பது ஒரு வேடிக்கை ,திராவிடம், திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாரகனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்தபிறகே திராவிடத்தை அதிகமாக பேசுகின்றனர் . திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்.

ராகுல் காந்தியின் நடைபயணம் பிரசாரத்தின் மூலம் அவர் அரசியல் செய்கின்றாரா என்ன. ராகுல்காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை.50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல்காந்தி நடந்து கொண்டு வந்துவிடுவாரா .

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனர். இருவருக்கும் வேலை இல்லை.. அடிக்கடி இது போன்று சந்தித்து கொண்டிருக்கின்றனர். நமக்கு நிறைய வேலை இருக்கு, அவர்களை பற்றி பேசவேண்டாம் என்றார் சீமான்.

Updated On: 11 Sep 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்