/* */

தேசிய அளவிலான காரத்தே போட்டி: தாம்பரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

தேசிய அளவிலான காரத்தே போட்டி: தாம்பரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
X

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கோவையில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டி தாம்பரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை குரும்பாளையத்தில் கென் ஐ கான் நேசனல் காரத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தாம்பரத்தை சேர்ந்த கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் கராத்தே பள்ளியை சேர்ந்த 4 மாணவர்களும் தேசிய அளவிலான காரத்தே போட்டியில் பங்கேற்றனர்.

தேசிய அளவினான போட்டியில் சிறப்பாக விளையாடி 2 வீரர்கள் தங்கமும், 2 வீரர்கள் வெள்ளி பதக்கமும் வென்றன்றர். கிங்ஸ் ஆண்ட் பஞ்சஸ் கராத்தே பள்ளியை சேர்ந்த குருசரண் மற்றும் வசிகரன் ஆகியோர் தங்கப்பதக்கமும், ஹர்சன் மற்றும் தருண் ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்று தாம்பரத்திற்கு பெருமை சேர்த்தனர்.

பதக்கம் வென்ற 4 வீரர்களுக்கு கிங்ஸ் ஆண்ட் பஞ்சஸ் கராத்தே பள்ளியின் நிறுவனர் சென்சய் கார்த்தியேன், சென்சய் வனிதா கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் காரத்தே பள்ளிசார்பில் பல்வேறு சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 6:45 AM GMT

Related News