/* */

கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இழுப்பளவு மழைநீர் - பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இடுப்பளவு மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இழுப்பளவு மழைநீர் - பொதுமக்கள் அவதி
X

கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில், இடுப்பளவு சூழ்ந்துள்ள மழை நீர் வடியாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், லட்சுமி நகரில் 7 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக, அனைத்து தெருக்களிலும் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால், மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
சில தெருக்களில், முழங்கால் வரை வடிந்த மழை நீரானது, இன்னும் சில தெருக்களில் தற்போதும் இடுப்பளவிற்கு தேங்கி நிற்கிறது.
அத்தியாவசிய தேவைகளுக்கு இடுப்பளவு மழை நீரில் மிதந்து வந்து, பொதுமக்கள் பொருட்களை வாங்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிலரது குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.
மழைநீரோடு, கழிவு நீரும் கலந்து ஒரே சகதியாகவும் துர் நாற்றத்துடனும் காணப்படுகிறது. தாம்பரம் பெருநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றி, நோய் தொற்று ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 23 Dec 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...