/* */

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனி டி.என்.பி.எல். அணியை உருவாக்கபட இருப்பதாக, அதன் செயலாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி
X

தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோஷியனின் 2வது ஆண்டு விழா, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர் ஆகியோர தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐ.எப்.எஸ்.அதிகாரி கலாநிதி, வீரர்களுக்கு விருதுகள் வழஙகி பாராட்டி பேசினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனின் தலைவர் செல்வகுமார் மற்றும் பிரபு ஆகியோர் பேசினர்.

அவர்கள் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனில் புதியதாக ஆயிரம் வீரர்கள் இணைந்துள்ளனர். கிராமப்புறத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் தேடி கண்டுபிடிக்கும் பணியை செய்து வருகிறோம். தற்போது டி.என்.பி.எல்.அணியில் 4 பேர் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளனர். விரைவில் செங்கல்பட்டுக்கான தனி டி.என்.பி.எல். அணி இடம் பெறும் என்றனர். செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேசன் துணை செயலாளர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்