பல்லாவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

பல்லாவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பல்லாவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
X
பல்லாவரத்தில் செல்போன் கொள்ளையர்கள் கைது. ( பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (17). இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் பழைய பல்லாவரம் சுரங்கப் பாதை அருகே சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூர்த்தியை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

உடனே பதறிப்போன மூர்த்தி இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களின் வாகனத்தின் எண்ணை வைத்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது பம்மல், பசும்பொன் நகரை சேர்ந்த பாலா(எ) சாம் (19) மற்றும் பிரின்ஸ் (எ) ஆப்பிள் (21) என்பது தெரிய வந்தது.

அவர்களது வீட்டுகளில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், மூர்த்தியிடம் வழிப்பறி செய்த விலையுயர்ந்த செல்போனையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 2. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 3. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிகளு அமைச்சர் மெய்யநாதன்...
 4. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 5. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 6. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 7. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
 8. நாமக்கல்
  நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
 9. விழுப்புரம்
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்
 10. சாத்தூர்
  மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: உதவி இயக்குநர் ஆய்வு