Begin typing your search above and press return to search.
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
HIGHLIGHTS

மேடவாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
.சென்னை, பள்ளிக்கரணை, காமகோட்டி நகரை சேர்ந்தவர் புனிதவதி(35), கடந்த மாதம் இவர் மேடவாக்கம், மாம்பாக்கம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 4 1/2, சவரன் நகைகளை பறித்து சென்றனர்.
இது குறித்து அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட விருதாச்சலம் தாலுக்கா சின்னக்காப்பான்குளத்தை சேர்ந்த சிவராமன்(40), கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரை சேர்ந்த சகாயராஜ்(43), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், புனிதவதியிடம் நகை பறித்ததும், மேடவாக்கத்தை சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகைகளை பறித்ததும் தெரியவந்தது.
இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த, 10 சவரன் நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.