/* */

சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்

குரோம்பேட்டையில் சாலை விபத்தில்  கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்
X

விபத்து (மாதிரி படம்)

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அக்ஷயா பாத்திமா(35), இவருடைய கணவர் அப்துல்வாஜித் இருவரும் நேற்றிரவு குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் சென்றுவிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிகொண்டிருந்தனர்.

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அக்ஷயா பாத்திமாவின் தலையில் கோயம்பேட்டிலிருந்து பெரம்பலூர் சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அக்ஷயா பாத்திமா சம்பவ இடத்திலேயே பலியானார்.
கணவர் அப்துல்வாஜித் எலும்பு முறிவு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் தட்சணாமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அப்துல்வாஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Updated On: 21 Nov 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை