/* */

குரோம்பேட்டையில் செய்தியாளரை தாக்கிய ஓட்டல் மேலாளர் உட்பட மூவர் கைது

சென்னை குரோம்பேட்டையில் செய்தியாளரை தாக்கிய ஓட்டல் மேலாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குரோம்பேட்டையில் செய்தியாளரை தாக்கிய ஓட்டல் மேலாளர் உட்பட மூவர் கைது
X

மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதையும் போலீசார் விசாரணை நடத்துவதையும் காணலாம்.

சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் ஓட்டல் வழியே சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முஸ்தபா என்பவர் செய்தி சேகரிக்க சென்று சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை படம் பிடித்துள்ளார்.

இதனை கண்ட தனியார் ஓட்டல் ஊழியர்கள் சென்று மேலாளர் சஞ்சய் சிங் என்பவரை அழைத்து வந்து நான்கு பேராக சேர்ந்து இங்கு வந்து வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது, என மிரட்டி செய்தியாளரின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆபாசமாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலாளர்மிரட்டியதால் பயந்து போன செய்தியாளர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் சக பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில் ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவர் என மூவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் சென்ற கழிவுநீர் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதை ஓட்டல் ஊழியர்கள் தடுக்க காரணம், அவர்கள் உணவகத்தில் சேகரமாகும் கழிவுநீரை தொட்டி கட்டி தேக்கி வைத்து கால்வாயில் விடுவதால், கழிவுநீர் ஜி.எஸ்.டி.சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 24 July 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா