தொழிலாளர்களுக்கு இனிப்பு வாங்கியதில் எந்தமுறைகேடும் இல்லை:போக்குவரத்து அமைச்சர்

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 262 க்கு இனிப்புகள் வாங்கப்பட்டன தற்போது அரசு நிறுவனமான ஆவினில் ரூ.230 க்கு வாங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொழிலாளர்களுக்கு இனிப்பு வாங்கியதில் எந்தமுறைகேடும் இல்லை:போக்குவரத்து அமைச்சர்
X

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் புதிய பேருந்துகளை தொடக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின்போது இயக்கப்பட்ட பேருந்துகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் 17 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த வித தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 262 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த முறை 230 ரூபாய்க்கு, அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆறு இடங்களில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 26 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 2. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 3. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 4. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 5. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...
 6. வழிகாட்டி
  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
 7. சினிமா
  செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி
 8. பொள்ளாச்சி
  மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 67 லட்சம்
 9. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
 10. விழுப்புரம்
  மாணவி ஸ்ரீமதி கொலை வழக்கில் தாளாளர் உட்பட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு