கடத்தல் தங்கம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் மின் சாதனப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடத்தல் தங்கம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது
X

இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம்.

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 6 பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த 6 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதனால் சந்தேகம் வலுத்தது.இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனா்.அவா்களில் 2 போ் தாங்கள் கால்களில் அணிந்திருந்த செருப்புகளில் தங்கப்பசை பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.மற்ற 4 பயணிகளின் உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள்,சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனப்பொருட்களையும் பறிமுதல் செய்தனா்.

6 பயணிகளிடமிருந்து 928 கிராம் தங்கம் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா்.அவைகளின் மதிப்பு ரூ.45.5 லட்சம்.இதையடுத்து 6 கடத்தல் பயணிகளையும் சுங்கத்துறை சட்ட விதிகளின்படி கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 13 Dec 2021 6:15 PM GMT

Related News

Latest News

 1. காங்கேயம்
  காங்கயத்தில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு; போலீசார் விசாரணை
 2. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது
 3. வழிகாட்டி
  எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
 4. இந்தியா
  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர்...
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா
 6. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 7. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 8. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 9. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 10. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்