பம்மலில் 6 ஆடுகளை திருடிய மர்ம நபர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமிரா

பம்மலில் 6 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கேமிரா பதிவு மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

செங்கல்பட்டு மாவட்டம், பல்லவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகர் சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 32) இவர் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்திவந்தார்.

இந்நிலையில் கடந்த 03.11.2021 அன்று வீட்டின் அருகில் இருந்த இரண்டு வெள்ளை ஆடுகளை காணவில்லை. அதேபோல் 06.11.2021. ஆம் தேதி காலை 10 மணியளவில் மழையின் காரணமாக தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 4 ஆடுகளையும் காணவில்லை. இவ்வாறு மர்மமான முறையில் காணாமல் போகும் தனது ஆடுகளை கண்டுபிடித்து தரகோரி பம்மல் சங்கநகர் காவல் நிலையத்தில் முரளி கிருஷ்ணன் புகார் மனு அளித்திருந்தார்.

புகாரின் பேரில் பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் உத்தரவின் பேரில் குற்றவியல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் தலைமை காவலர் திணேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் மனிகண்டன், தனபால் ஆகியோரை கொண்ட தனிபடை அமைத்து ஆடுகள காணாமல் போன இடங்களில் உள்ல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஆடுகளை திருடியது குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் 13 வது தெருவை சேர்ந்த டேவிட்வினோத் என தெரியவந்தது. மேலும் குற்றவாளியை கைது செய்து விசாரணைக்கு பினனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 2. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 3. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 4. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 5. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 6. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 7. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 8. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...
 9. வழிகாட்டி
  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
 10. சினிமா
  செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி