/* */

சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள் விழா, முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள் விழா, முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
X

முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக சார்பாக வன்னி அரசு ஆகியோரும் நேரில் சங்கரய்யாவை வாழ்த்தினர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Updated On: 15 July 2021 7:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்