/* */

விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னை வந்த ஏா்இந்தியா விமானத்தினுள் ரூ.2.9 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் பறிமுதல்.

HIGHLIGHTS

விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று அதிகாலை வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல வேண்டும். எனவே ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்தினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது ஒரு விமானத்தில் பயணிகள் அமரும் ஒரு சீட் தூக்கிக்கொண்டு உயா்ந்திருந்தது. அதை சரிசெய்ய முயன்றனா். ஆனால் சீட்டிற்கு அடியில் வெள்ளை கலா் பார்சல் ஒன்று இருந்தது.

இதையடுத்து சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு விமானநிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடக்டருடன் விரைந்து வந்து சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து பார்சலை பிரித்து பார்த்த போது உள்ளே தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் விரைந்து வந்து தங்கக்கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். 6 தங்கக்கட்டிகள் இருந்தன. மொத்தம் 6 கிலோ. அதன் சா்வதேச மதிப்பு ரூ.2.9 கோடி. இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். விமானத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவை வைத்து கடத்தல் ஆசாமியை தேடுகின்றனா்.

Updated On: 17 April 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?