/* */

போதைப் பொருள்களை கண்டறிய முதல் முறையாக 2 மோப்ப நாய்கள் பணியில் சேர்ப்பு

விமானத்தில் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்

HIGHLIGHTS

போதைப் பொருள்களை கண்டறிய முதல் முறையாக 2 மோப்ப நாய்கள் பணியில் சேர்ப்பு
X

 மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்து மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ ஆகியவை ஒப்படைக்கும் விழா சென்னை விமான நிலையத்தில் நடந்தது. 

சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறிய உதவும் வகையில் முதல் முறையாக 2 மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டன

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனரகம் முலமாக விமான நிலையம் மற்றும் சரக்ககப் பிரிவுவெளிநாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயணிகள் சுங்க விதிகளுக்குட்பட்டு பொருட்களை எடுத்து வருகின்றனர். சுங்க வரி செலுத்தி தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை கொண்டு வரப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

மேலும் சட்ட விரோதமாக கடத்தி வரும் பாெருட்களை பறிமுதல் செய்து அவற்றிக்கு சுங்க வரி மற்றும் அபராதம் விதித்து வசூலிக்கப்படும். மேலும் குற்றவியல் நடவடிக்கையாக இருந்ததால் பணிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் போதைப் பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா மோப்ப நாய் பிரிவு என புதிதாக தொடங்கப்பட்டது.

சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் தலைமை வகித்து இந்த மோப்ப நாய் பிரிவை தொடங்கி வைத்தார். மோப்ப நாய்களான ஒரியோ, ஆர்லியோ மோப்ப நாய்களை தமிழகம், புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா சுங்க இலாகா அதிகாரிகளிடம் தலைமை கமிஷனர் எம்.வி.எஸ். சவுத்ரி ஒப்ப்டைத்தார். பின்னர் ஓரியோ மற்றும் ஆர்லி ஆகிய மோப்ப நாய்கள் போதை பொருட்களை எப்படி கண்டு பிடிக்கின்றன என்பதை பயிற்சி மூலம் செய்து காட்டினர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் இருந்து இந்த மோப்ப நாய்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்ககப் பகுதிகளில், இந்த நாய்கள் தினமும் சுற்றி வரும். சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக இது போன்ற மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தலைமை கமிஷனர் சவுத்ரி பேசுகையில், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸ் துறையில் நாய்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடத்தல்களை தடுக்கவும் மனிதர்களை பாதுகாக்கவும் இவற்றின் பங்கு முக்குயமானது. இந்த நிலையில் 1984ல் சுங்கத்துறையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சுங்கத்துறையில் மீண்டும் மோப்ப நாய்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

மேலும் விமானத்தில் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இதன் வாயிலாக விமான நிலைய சுங்கத் துறையின் நுண்ணறிவுப் பிரிவு சிறந்த பிரிவாக மாறும் என்றார் அவர்.இந்த நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய முதன்மை கமிஷனர் உதயபாஸ்கர், விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 29 Dec 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?