பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய ஆசாமி கைது

பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய அரியலூா் ஆசாமியை,சங்கா்நகா் போலீசாா் கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய ஆசாமி கைது
X

பெண்வேட்பாளருக்கு ஆபாசவீடியே, போட்டோக்களை அனுப்பிய அரியலூர் நபர்

தமிழக சட்டமன்ற தோ்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ,போட்டோக்களை அனுப்பிய அரியலூா் ஆசாமியை,சங்கா்நகா் போலீசாா் கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை பல்லாவரம் அருகே பம்மல் ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி (35).இவர் சட்டசபை தேர்தலில், மை இந்தியா கட்சியின் சார்பில், பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வீரலட்சுமி செல்போன் வாட்ஸ் ஆப்பிற்கு ஆபாச புகைப்படம் வந்தது.

அருவருக்கத்தக்க வகையிலும், பாலியல் வன்புணர்ச்சி எண்ணத்தோடும், அசிங்கமான வீடியோக்கள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சங்கா்நகா் போலீசில் புகாா் செய்தாா்.போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா்.ஆனால் குற்றவாளியை கைது செய்யவில்லை.இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி,சென்னை விமானநிலையம் எதிரே உள்ள டவர் மீது ஏறி குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதையடுத்து கடந்த மாதம் வீரலட்சுமியின் முகநூல் பக்கத்துக்கும் மற்றும் வாட்ஸ்அப் எண்ணிற்க்கும் மீண்டும் ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டன.

அதோடு வீரலட்சுமிக்கு வீடியோ கால் செய்து அதில் ஆபாசமாக அந்த நபர் நின்றுள்ளார்.இது குறித்தும் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தபால் மூலமாக வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடா்ந்துசென்னை சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசார் ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபரின் செல்போன் டவரை வைத்து ஆய்வு செய்தனா்.

அதில் அந்த நபா் அரியலூா் மாவட்டம் கரைமேடு, உடையார் பாளயத்தை சோ்ந்த ஆரோக்கியசாமி(37) என்று தெரியவந்தது.மேலும் அவா் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சங்கர் நகர் போலீசார் கேரளாவுக்குச் சென்று ஆரோக்கியசாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

ஆரோக்கியசாமி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்ததாகவும், இரண்டு வருடங்களாக பல பெண்களுக்கு ஆபாச வீடியோவை முகநூலில் அனுப்பி வருவதாகவும் விசாரணையில் ஆரோக்கியசாமி தெரிவித்தார்.மேலும் வீரலட்சுமி தோ்தலில் போட்டியிடுவதோடு,சமூகவலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களுடன் பதிவுகள் போட்டதால்,அதைப்பாா்த்து அவருக்கும் அனுப்பியதாக கூறினாா்.

இதனைத் தொடர்ந்து ஆரோக்கியசாமி மீது சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தியது,பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாம்பம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

Updated On: 21 July 2021 11:15 AM GMT

Related News