27.31 லட்சம் மதிப்புள்ள தங்கபசை கடத்தி வந்த விமானபயணி கைது

சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் ரூ 27.31 லட்சம் மதிப்பு தங்கைபசையை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
27.31 லட்சம் மதிப்புள்ள தங்கபசை கடத்தி வந்த விமானபயணி கைது
X

விமான பயணி கடத்தி வந்த தங்கம்

*சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,சென்னையை சோ்ந்த கடத்தல் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை*

சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த 31 வயது ஆண் பயணி ஒருவா், தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, சேனல் வழியாக வெளியே சென்றாா்.

சுங்கத்துறையினருக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை மீண்டும் உள்ளே அழைத்து வந்து ழுழுமையாக சோதனையிட்டனா்.அந்த ஆண் பயணியின் உள்ளாடைக்குள் 4 சிறிய பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சுங்கத்துறையினா் பாா்சல்களை பிரித்துப்பாா்த்தபோது, அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். மொத்தம் 555 கிராம் இருந்தது.அதன் மதிப்பு ரூ.27.31 லட்சம். இதையடுத்து பயணியை சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 2021-10-31T00:33:12+05:30

Related News