பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

பல்லாவரம் அருகே பம்மலில் 14 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!
X

போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் ரஹிம் (வயது 24) . இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகியுள்ளார்.

இதனால் 14 வயது சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கரு கலைப்பதற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு திருமணமாகாமல் 14 வயது சிறுமி கரு கலைப்பதற்காக அழைத்து வந்ததால் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் நேரில் சென்ற அதிகாரிகள் 14 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பம்மல் நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த ரகிம் என்பவரை காதலித்தது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தாம்பரம் மகளிர் போலீசார் ரஹிம்மை கைது செய்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Jun 2021 2:33 PM GMT

Related News