செங்கல்பட்டு: ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாட்டில் உள்ளது உண்மை தான் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு: ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு
X

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஊராட்சியில் தொடர்ந்து ஒரு மாத காலங்களாக ஆங்காங்கே சிறப்பு தடுப்பூசி திருவிழாக்கள் முகாம்கள் அமைத்து மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் அவளுக்கு குர்ஆனும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, இன்று பெரும்பாக்கம் ஊராட்சியில் சுமார் 2000 வீடுகளுக்கு மேல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி சிவகலைச்செல்வன், பெரும்பாக்கம் ஊராட்சி செயலாளர் முருகன், மேடவாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரபாவதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெரும் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது இதனால் இன்று முதல் மாவட்டம் முழுவதும் ஒருசில தளர்வுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் ஒரு நாளைக்கு 2200 க்கும் மேல் நோய்த்தொற்று ஏற்படுகிறது. தாம்பரம், பல்லாவரம் தாலுகாவில் மட்டும் நோய்தொற்று மிக அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் அதிகமான முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நோய்த்தொற்றை தடுப்பதற்கு மக்கள் அதிகம் வெளியே வராமல் தவிர்ப்பது மளிகை கடைக்கு செல்கின்றேன் என்று தினமும் கூட்டம் கூட்டமாய் போகக்கூடாது மக்கள் தனிப்பட்ட முறையில் இந்த ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இடையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியான மாவட்ட அளவில் ஆக்சிசன் படுக்கைகள் பற்றாக்குறையினால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறுகின்றனர் என் கேட்டபோது மாவட்ட அளவில் ஆக்சிசன் படுக்கைகள் கொண்ட 8 மருத்துவ மனைகள் உள்ளன அவற்றில் 1700 படுக்கைகள் இருக்கின்றது அவை தினந்தோறும் அதிகமான நோயாளிகள் வருவதால் நிரம்பி வழிகிறது அதனால் ஆக்சிசன் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படுவது உண்மைதான் என அவர் கூறினார்.

Updated On: 2021-05-11T10:40:29+05:30

Related News