Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவிக்கு திருணம் ஆசைக்காட்டி அழைத்து சென்றவர் போக்சோவில் கைது
பள்ளி மாணவிக்கு திருணம் ஆசைக்காட்டி அழைத்து சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS

சென்னை சங்கர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர்.
சென்னை சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 30ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசார் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேந்தர்(21), என்ற இளைஞர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று விழுப்புரம், விருதாச்சலம், பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, நாகபட்டினம் என ஊர் ஊராக சுற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சென்னையில் தெரிந்தவர் ஒருவர் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த போது அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்தார்.
சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.