பல்லாவரம் அருகே அடகுக்கடையில் 30 சவரன் நகை அபேஸ்: 2 பேர் கைது

பல்லாவரம் அருகே, அடகுக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பட்டதாரி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில், பல வருடங்களாக அடகுகடை, மற்றும் நகை விற்பனை கடையை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின். இவரது கடைக்கு கடந்த 31-10-2021 அன்று, நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர், தங்கச் சங்கிலி வேண்டும் என கேட்க அவரும் கடையில் இருந்த செயின்களை காண்பித்துள்ளார்.

செயினின் மாடல் பிடிக்க வில்லை என கூறிய இளைஞர், வேறு செயினை காண்பிக்க கேட்டுள்ளனர். இதனால் கமலேஷ் ஜெயின் அருகில் உள்ள, தெரிந்தவரின் நகைக்கடையில் இருந்து 5 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து காண்பித்துள்ளார். அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போதே நகைக்கடைகாரரின் கவனத்தை திசை திருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் 30 சவரன் மதிப்புள்ள, 5 தங்க சங்கிலியையும் எடுத்துக் கொண்டு, வெளியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக, கமலேஷ் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வாகன எண்ணை வைத்து இருவரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் எனவும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த் பிரான்சிஸ் சேவியர்(24), மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த வினோத் (32), என்பது தெரியவந்தது. பணம் பிரச்சனை இருந்ததால் வினோத் திட்டமிட்டு தனது நண்பரான பிரான்சிஸ் சேவியரோடு சேர்ந்து இதில் ஈடுபட்டுள்ளார். 30 சவரன் தங்க நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 2021-11-16T17:03:56+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42 லட்சம் பேர் பயணம்
 2. தேனி
  சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலமா? விடையளிக்கும் புதிய ஆய்வு...
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை...
 4. சினிமா
  ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி
 5. தேனி
  இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்... நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம்
 6. சினிமா
  துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
 7. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 8. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
 10. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது