Begin typing your search above and press return to search.
பல்லாவரத்தில் தடையை மீறி இந்து திராவிட கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்லாவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து திராவிட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

பல்லாவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து திராவிட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் இந்து திராவிட கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிறுமியிடம் தவறாக நடந்த நபர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட இந்து திராவிட கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவித்தனர்.