ஞாயிறு முழு ஊரடங்கு : சென்னை உள்நாட்டு பயணிகள் முழு ஆதரவு

ஞாயிறு முழு ஊரடங்கிற்கு சென்னை உள்நாட்டு பயணிகள் முழு ஆதரவு அளித்தனர். இதனால் பயணிகள் இல்லாமல் விமானநிலையம் வெறிச்சோடியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஞாயிறு முழு ஊரடங்கு : சென்னை உள்நாட்டு பயணிகள் முழு ஆதரவு
X

வெறிச்சோடிய சென்னை உள்நாட்டு விமானநிலையம் பகுதி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிறு முழு ஊரடங்கிற்கு சென்னை உள்நாட்டு பயணிகள் முழு ஆதரவு.பயணிகள் இல்லாமல் விமானநிலையம் வெறிச்சோடியதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் குறைக்கப்பட்டு,குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இயங்கிய விமானங்களிலும் கா்ணூல் 2 பயணிகள், தூத்துக்குடி 9 பயணிகள், மதுரை 12 பயணிகள், திருச்சி 14 பயணிகள், மைசூர் 16 பயணிகள் என்று குறைந்த அளவு பயணிகளுடன் விமானங்கள் இயங்கின..

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பெருமளவு வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுக்குள் கொண்டு வந்து, முடிவு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வழிபாட்டு,வழிப்பாட்டு தளங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தி வருகிறது.

அதைப்போல் 3 வது ஞாயிறான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கான இன்று சென்னை விமான நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலைக்கு முன்பாக தினமும் 170 லிருந்து 180 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கையும் தினமும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையில் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதும் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.

இன்று ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 81 விமானங்கள் புறப்பாடு, 81 விமானங்கள் வருகை என்று 162 விமானங்கள் ஆக குறைந்து விட்டது.இதனால் சுமார் 100 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் குறைக்கப்பட்டு ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதைப்போல் இன்று பயணிகள் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து இன்னைக்கு 12,000 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

இது தவிர இன்று இயக்கப்படும் விமானங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணிக்கின்றனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் 9 பயணிகள், மதுரை விமானத்தில் 12 பயணிகள், திருச்சி விமானத்தில் 14 பயணிகள், மைசூர் விமானத்தில் 16 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.சென்னையிலிருந்து ஆந்திரா மாநிலம் கா்ணூல் செல்லும் விமானத்தில் 2 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனா். ஆனால் கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில் வழக்கம் போல் ஒவ்வொரு விமானங்களிலும் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.

Updated On: 23 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
 2. காஞ்சிபுரம்
  காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: காஞ்சிபுரம் மாவட்ட...
 3. கிணத்துக்கடவு
  மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. 'நட்பூ' போற்றும் விழா..!
 4. புதுக்கோட்டை
  தலைமுடியால் வேனை இழுத்து சாதனை படைத்த மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன்...
 5. புதுக்கோட்டை
  அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு ஆக.27, 28 -ல் புதுக்கோட்டையில்...
 6. இந்தியா
  மகாராஷ்டிரத்தில் ஷிண்டே அரசு ஜூலை 4 ல் பெரும்பான்மை நிரூபிக்க...
 7. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் சிறந்த 5 பொறியியல் கல்லூரிகள்
 8. கல்வி
  ஈரோடு மாவட்டத்தில் 5 சிறந்த கல்வியியல் கல்லூரிகள்
 9. நாமக்கல்
  நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
 10. விழுப்புரம்
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்