அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது

அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது
X

கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஓரம் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சங்கர் நகர் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி, ராமசந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன். அண்ணாதுரை ஷெர்லின் .ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று கண்காணித்த போது கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த மாங்காட்டை சேர்ந்த சிவசங்கர்(25), கோவூரை சேர்ந்த இந்துநாதன்(35), மவுலிவாக்கத்தை சேர்ந்த முரளி(29), கெருகம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(எ) பாட்டில் மணி(27), ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 Dec 2021 7:30 AM GMT

Related News