குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு கொரோனா

குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு டெஸ்ட்டில் பாசிடிவ் வந்ததால் தாம்பரம் மாநகராட்சி கடையை மூடியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குரோம்பேட்டை சரவணா ஸ்டோாஸ் ஊழியா்கள் 22 பேருக்கு கொரோனா
X

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் சுமாா் 500 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் புதன்கிழமை அவா்களில் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான ரிசல்ட் இன்று காலை வந்தது. அதன்படி 22 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கபட்ட 22 ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனா்.அதோடு சென்னையில் அந்த நிறுவனத்தால் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அனுப்பி வைக்கபட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட 22 பேர்களில் பலருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தை மூட வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சியின்,பல்லாவரம் மண்டல சுகாதாரதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்படி குரோம்பேட்டை சரவணா ஸ்டோா்ஸ் இன்று மதியத்திலிருந்து மூடிப்பட்டுள்ளது.

Updated On: 7 Jan 2022 9:45 AM GMT

Related News