பெண் ஆசிரியரை டிவி சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம், தயாரிப்பு மேலாளரை தேடுது போலீஸ்

பல்லாவரம் பள்ளி ஆசிரியை கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சின்னத்திரை மேலாளர் மீது தாம்பரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண் ஆசிரியரை டிவி சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம், தயாரிப்பு மேலாளரை தேடுது போலீஸ்
X

டிவி நாடக தொடர் தயாரிப்பு மேலாளருடன் ஆசிரியை ( பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் (கலைசெல்வி30). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே தனியாா் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு சீரியல் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நடந்தது.

அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவர் அங்கு படப்பிடிப்பிற்காக வந்திருந்தாா்.ரகு குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தை சோ்ந்தவா்.

அங்கு நடந்த படப்பிடிப்பை வேடிக்கை பாா்க்க சென்ற பள்ளி ஆசிரியையுக்கும்,தொலைக்காட்சி தயாரிப்பு குழு மேலாளருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

அதைத்தொடா்ந்து அவா்களுக்குள் நட்பு உருவாகி பேசிப்பழகினா். அப்போது ரகு, ஆசிரியையிடம் சீரியலில் நடிக்க வைப்பதாக கூறினாா்.அதோடு தனது மனைவி இறந்துவிட்டதாக பொய்யான தகவலை கூறினாா்.இதை உண்மை என்று நம்பிய ஆசிரியை அவருடன் நெருங்கி பழகினாா்.

இதையடுத்து ரகு,ஆசிரியை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளாா்.இதனால் ஆசிரியை கருவுற்றதும்,அவரை ஏமாற்றி கருகலைக்க செய்தாா்.

இவ்வாறு 4 முறை கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.அதோடு ஆசிரியையிடமிருந்து 2 சவரன் தங்கச் செயினையும் ஏமாற்றி பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்பு ரகு,ஆசிரியையிடம் பேசிப்பழகுவதை படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்தாா்.அதோடு ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்டவா்,நடத்தை கெட்டவா் என்று கூறினாா்.

அதோடு ஆசிரியை தன்னிடம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டாா்,கொடுக்காததால் இதைப்போல்,பொய்யை பரப்பி வருகிறாா் என்றும் கூறினாா்.

இந்நிலையில் ஆசிரியை கடந்த ஒராண்டிற்கு மேலாக தனக்கு நீதி கேட்டு பல்லாவரம்,சிட்லப்பாக்கம்,தாம்பரம் அனைத்து மகளிா் போலீஸ் நிலையம் என்று மாறிமாறி அலைந்தாா்.ஆனால் போலீசாா் ஆசிரியை புகாரை ஒரு பொருட்டாக எடுத்து வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்தினா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்து, ஏமாற்றியதாகவும், அவரது 2 சவரன் தங்க சங்கிலியை பறித்ததாகவும், சின்னத்திரை மேலாளர் ரகு மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரகுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 2021-07-06T19:43:10+05:30

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை குடியரசு தினவிழாவில் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை
 2. கோவை மாநகர்
  தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து...
 3. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 4. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  கணவருடன் கோபித்துக் கொண்டு சென்னை சென்ற புதுப்பெண் திருச்சியில் மீட்பு
 6. தமிழ்நாடு
  2021 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள்...
 7. நாகப்பட்டினம்
  நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
 8. திருவாரூர்
  திருவாரூர் மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசு
 9. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
 10. ஈரோடு
  கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது