/* */

அனகாபுத்தூர் அருகே பாழடைந்த கிணற்றை எட்டி பார்த்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

அனகாபுத்தூர் அருகே பாழடைந்த கிணற்றில் இருந்த மீன்களை தனது நண்பர்களுடன் எட்டி பார்த்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்

HIGHLIGHTS

அனகாபுத்தூர் அருகே பாழடைந்த கிணற்றை  எட்டி பார்த்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
X

பாழடைந்த கிணற்றில் இருந்து சிறுவன் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த அனாகபுதூர் பாரி நகரை சேர்ந்தவர் திருப்புகழ் இவருடைய மகன் திவின் குமார் வயது (10) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், இன்று காலை தனது நண்பர்களான யுவராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோருடன் புண்ணியகோட்டி நகரில் உள்ள காலி மைதானத்தில் விளையாட சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் மீன்கள் இருப்பதை கண்டு மூவரும் எட்டிபார்த்த போது, திவின் குமார் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதனை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டபடி கிணற்றுக்குள் குதித்துள்ளனர்.

இதனை கேட்ட அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் யுவராஜ் மற்றும் அஸ்வினை காப்பாற்றினர். ஆனால் தீலிப் குமார் நீரில் மூழ்கியதால் முயற்சி செய்தும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு செனற தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரம் போராடி திலிப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  3. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  4. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  5. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  6. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  7. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  8. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  9. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  10. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...