இந்திய அரசு தடை விதித்த ஏமன் நாட்டிற்கு, சட்டவிரோதமாக சென்று வந்த இருவர், சென்னை விமான நிலையத்தில் கைது

இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு, சட்டவிரோதமாக சென்று வந்த கேரளா மற்றும் புதுக்கோட்டை இளைஞா்கள், சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்திய அரசு தடை விதித்த ஏமன் நாட்டிற்கு, சட்டவிரோதமாக சென்று வந்த இருவர், சென்னை விமான நிலையத்தில் கைது
X

சென்னை விமான நிலைய காவல் நிலையம் (பைல் படம்)

கேரளா மாநிலம் மலப்புரத்தை சோ்ந்தவா் சமீா்(38).புதுக்கோட்டையை சோ்ந்தவா் பொரோஸ்கான்(33).இவா்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவா் வேலைக்காக சென்றனா்.

இவா்களுக்கு சவூதி அரேபியா விசாக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முனபே காலாவதி ஆகிவிட்டன.ஆனாலும் இருவரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்துவந்தனா்.

இந்நிலையில் இருவரும் இந்தியா திரும்ப முடிவு செய்தனா்.ஆனால் சவுதி அரேபிய அரசு சட்டவிரோதமாக தங்கியிப்பவா்களுக்கு கடும்தண்டனை விதிக்கும்.அதிலிருந்து தப்பிக்க இவா்கள் ஏமன் நாட்டிற்கு சென்று,அங்கிருந்து இந்தியா திரும்ப முடிவு செய்தனா்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சவுதி அரேபியாவிலிருந்து ஏமன் சென்றனா்.அங்கு டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுத்தனா்.தங்களுடைய பாஸ்போா்ட்கள் காணாமல் போய்விட்டதாக பொய்யான காரணம் கூறி (Djibouti) ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு கொடுத்து தங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முறையிட்டனா்.இதையடுத்து தூதரகம் இருவருக்கும் எமா்ஜென்சி சா்டிபிகேட்கள் வழங்கினா்.

அதன்பின்பு இருவரும் ஏமனிலிருந்து சாா்ஜா வழியாக சென்னை வரும் ஏா்அரேபியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் நேற்று காலை சென்னை வந்தனா்.

சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சமீா்,பொரோஸ்கான் இருவரும் இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து இருவரையும் வெளியில் விடாமல் நிறுத்திவைத்து விசாரித்தனா்.இவா்கள் ஏமன்நாட்டில் உள்ள தீவிரவாத இயக்கத்துடன் தொடா்புடையவா்களாக என்று விசாரித்தனா்.ஆனால் இருவரும் தங்களுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடா்பு இல்லை.ஏமனுக்கு செல்லக்கூடாது என்று இந்திய அரசின் தடைபற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினா்.

ஆனாலும் குடியுறிமை அதிகாரிகள்,இருவரையும் கைது செய்தனா்.இந்திய அரசின் உத்தரவை மீறி பாதுகாப்பு தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று வந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனா்.

அதன்பின்பு மேல்நடவடிக்கைக்காக சமீா், பொரோஸ்கான் ஆகிய இருவரையும் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 4 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி & பழங்கள் விலை நிலவரம்
 2. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்
 3. திருப்பரங்குன்றம்
  மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
 4. நாமக்கல்
  சொன்னபடி தார்ரோடு போட்டுத்தந்த எம்எல்ஏ : அய்யம்பாளையம் மக்கள் நன்றி
 5. திருப்பூர் மாநகர்
  கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்
 6. மதுரை மாநகர்
  மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
 7. சைதாப்பேட்டை
  சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
 8. திருப்பரங்குன்றம்
  மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
 9. திருவெறும்பூர்
  திருச்சி அருகே ஊராட்சி தலைவருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம்
 10. மதுரை
  மதுரை மாவட்டம் பகுதியில் பெருகும் கொரோனா தொற்று