/* */

பேருந்து சக்கரம் ஏறி கணவன் கண்முன் மனைவி பலி: குரோம்பேட்டையில் பரிதாபம்

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, டூ வீலர் நிலை தடுமாறிய விபத்தில், கணவன் கண்முன் மனைவி பலியானர்.

HIGHLIGHTS

பேருந்து சக்கரம் ஏறி கணவன் கண்முன் மனைவி பலி: குரோம்பேட்டையில் பரிதாபம்
X

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அக்ஷயா பாத்திமா வயது, 30 இவருடைய கணவர் அப்துல் அஜித். இருவரும் குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் சென்று விட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பின்னால் வந்த வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அக்ஷயா பாத்திமாவின் தலையில், கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில், அக்ஷயா பாத்திமா சம்பவ இடத்திலேயே பலியானார்.

கணவர் அப்துல் அஜித், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை கண்ட வாகன ஓட்டிகள், அங்கிருந்தவர்கள் உடனடியாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அப்துல் அஜித், அதே மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருகிறார். கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்