Begin typing your search above and press return to search.
அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு
அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் வகையில் குடில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
HIGHLIGHTS

மழைமலை மாதா திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மழைமலை மாதா திருத்தலத்தில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இயேசு பிறப்பின் நினைவுகளை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குடில் அமைத்து வழிபாடு நடத்துவர்.
அதன்படி அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா திருத்தலத்தில் மெகா குடில் அமைக்கப்பட்டு பக்தர்களுக்காக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த குடில் வரும் பொங்கல் நாள் வரை பக்தர்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அனைவரும் வருகை தந்து குழந்தை ஏசு ஆசீர்வாதமும் அன்னைமரியாளின் அற்புதத்தையும் பெற கேட்டுக்கொள்கிறது.