/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவிகிதமும், 7 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.
X

பாலாறு

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் கடலின் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே கடந்த 2019-ம் ஆண்டு அணுமின் நிலைய நிர்வாகம் மூலம் 5 அடி உயரத்துக்கு தடுப்பணை அமைக்கப்பட்டது.

குறிப்பாக, காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து பாலாற்றின் இருபுறமும் பிரியும், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சக்கரமல்லுார், துாசி ஆகிய நான்கு கால்வாய் மூலம், 324 ஏரிகளை நிரப்புகின்றன. இந்த 324 ஏரிகளும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன.

இந்த நான்கு கால்வாய் மூலம், 80 ஆயிரத்து, 467 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாலாறு மூலம், இந்தாண்டு ஏராளமான நீர்நிலைகள் முழுதுமாக நிரம்பியுள்ளன. மேலும் அதீத கனமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 884 க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மொத்த ஏரிகளில் 563 ஏரிகள் 100 சதவிகிதமும், 100 ஏரிகள் 75 சதவிகிதமும், 317 ஏரிகள் 50 சதவிகிதமும், 1 ஏரி 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த ஏரிகள் எண்ணிக்கை 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவிகிதமும், 7 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 Dec 2021 5:30 AM GMT

Related News