Begin typing your search above and press return to search.
குமிழி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பு
குமிழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிடும் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணனுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்தனர்.
கடந்த 40 ஆண்டு காலமாக குமிழி ஊராட்சியில் சாலை, சுடுகாடு, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் போராடிவரும் சமூக ஆர்வலர் சரவணன், தற்போது அவரது மனைவி நந்தினிசரவணனை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்திருக்கிறார்.
இவருக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.