/* */

செங்கல்பட்டு நகராட்சியில் பல்வேறு பணிகள் தேக்கம்: இந்து மக்கள் கட்சியினர் புகார்

செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு நகராட்சியில் பல்வேறு பணிகள் தேக்கம்: இந்து மக்கள் கட்சியினர் புகார்
X

செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள புகார் மனுவில், செங்கல்பட்டு நகரில் 30 வது வார்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இது வரை அதற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

28, 29, 30, வார்டுகளில் குடிநீர் குழாய்கால் அமைப்பதற்கு நகராட்சி பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் வீடுகளில் பணம் பெற்றுக்கொண்டு குடிநீர் இணைப்பு வழங்குகின்றனர். இதனை கண்டுகொள்ளாத நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

நகர பகுதியில் முகக்கவசம் அணியாமல் உள்ளவர்களை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் நகரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதை கண்டுகொள்ளாத நகராட்சி ஆணையரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 25 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு