/* */

மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு, தற்கொலையா என காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு
X

மறைமலைநகரில் மீட்கப்பட்ட உடல்கள் 

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல்( வயது-44) இவர் மனைவி ஜெயந்தி (வயது-38) இவர்களுக்கு ஐஸ்வர்யா( வயது-5) பூஜா (வயது-3) என இரண்டு மகள்கள் உள்ளனர்,

ஞானவேல் கடந்த 15 ம் தேதி முதல் இருமகள்களுடன் ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் நேற்று 18ம் தேதி தன் கணவரையும் குழந்தைகளையும் காணவில்லை என புகார் அளித்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும், அருகே உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில் இரண்டு சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்துபோனது எழும்பூரில் காணமல் போன ஞானவேல் மற்றும் அவரது குழந்தைகள் என தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 19 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  2. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  3. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  6. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  7. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  8. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  9. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  10. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?