தாம்பரம் திமுக எம்எல்ஏ தனியார் கம்பெனியில் புகுந்து மிரட்டல், ஆபாசப் பேச்சு

DMK Tamil News -தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் கம்பெனியில் புகுந்து மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாம்பரம் திமுக எம்எல்ஏ தனியார் கம்பெனியில் புகுந்து மிரட்டல், ஆபாசப் பேச்சு
X

தனியார் கம்பெனி ஊழியர்களை மிரட்டும் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா.

DMK Tamil News -செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் செயலபட்டு வரும் தனியார் கம்பெனி ஒன்றில் நேற்று காலை அத்துமீறு நுழைந்த திமுகவை சேர்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, கம்பெனி நிர்வாகிகளை ஆபாசமாக மிரட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டுகிறார்.

கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன், நீ என்ன ஆட்சியாயா? என்னயா பேசுற என ஏக வசனத்தில் மிரட்டுகிறார் திமுக எம்.எல்.ஏ ராஜா, நான் தலைமை செயலகம் போறேன் என கம்பெனி நிர்வாகி கூற இவர் மெல்ல மெல்ல நடந்து செல்கிறார்.

பின்னர் இன்னும் கோபமடைந்த திமுக எம்.எல்.ஏ. லவடிக்கபால், கை கால்களை உடைத்து விடுவேன் என மிகக் கடுமையாக மிரட்டுகிறார்.

தன் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் சிங்க பெருமாள் கோவிலில் உள்ள தனியார் கம்பெனியை திமுக எம்.எல்.ஏ. மிரட்டுவது கம்பெனி நடத்துவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து எஸ்.ஆர்.ராஜாவிடம் கேட்டதற்கு என்னை திட்ட தூண்டுகிறார்கள் அதனால் திட்டி விட்டதாக கூறுகிறார். பிறகு செய்தி போடாமல் உதவுமாறும் கேட்கிறார்.

மக்கள் பிரதிநிதியான ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தமிழக முதல்வர் கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-09-22T14:58:44+05:30

Related News