/* */

பாலம் சீரமைப்பு பணியால் தினமும் 7 கிலோ மீட்டர் மாணவர்கள் நடைபயணம்

செங்கல்பட்டு பஸ் நிலையத்திலிருந்து இருங்குன்றம்பள்ளி வரை தற்காலிக பஸ் இயக்க கோரிக்கை

HIGHLIGHTS

பாலம் சீரமைப்பு பணியால் தினமும் 7 கிலோ மீட்டர் மாணவர்கள் நடைபயணம்
X

சீரமைப்பு பணி நடந்து வரும் மதுராந்தகம்-செங்கல்பட்டு பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலாற்றின் மீது இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம் செல்லும் பழைய பாலம் சேதமடைந்தது. இதை யடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பிப்.7 முதல் சீரமைப்பு பணி துவங்கி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மதுராந்தகத்திலிருந்து செங்கல்பட்டு வரும் மார்க்கத்தில் உள்ள பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மார்ச் மாதம் 20ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. பிலாப்பூர், காவூர், காவிய தண்டலம், ஓரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று, காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெடுஞ்சாலையை அடைந்து, சென்னை நகருக்கு இயக்கப்படுகின்றன.

இதனால் மதுராந்தகம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு நகருக்கு நாள்தோறும் வரும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பணி நடைபெற்று வரும் பாலத்தின் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இருச்சர வாகனங்களும் குறுகிய பாதையில் செல்ல வேண்டும் என்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பேருந்துகளும் கிராமங்கள் வழியாக சுற்றிக்கொண்டு வருவதால் மாணவ-மாணவிகள் பாலத்தின் அந்தகரையில் இறங்கி செங்கல்பட்டுக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து பாலாறு கரை வரையிலான இருங்குன்றம்பள்ளி வரை காலை நேரங்களில் தற்காலிகமாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 9 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பர்கூர் அடந்த வனப்பகுதியில் ஆம்புலன்சிலேயே பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி